பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்துடன் சோலார் வேலி அமைக்கலாம்!

Added : மே 20, 2020
Share
Advertisement

சோலார் திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவது குறித்து, வேளாண் பொறியியல் பொறுப்பு உதவி செயற்பொறியாளர் விநாயகம் கூறியதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 எச்.பி., 7.5 எச்.பி., 10 எச்.பி., ஆகிய குதிரை திறன் உடைய சோலார் பம்ப் செட் அமைப்பதற்கு, 70 சதவீதம், அரசு மானியம் வழங்குகிறது.

அதேபோல், ஐந்து வரிசை உடைய - 250 மீட்டர்; ஏழு வரிசை உடைய - 350 மீட்டர்; பத்து வரிசை உடைய - 450 மீட்டர் சோலார் வேலி அமைக்க, 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்கள், பெண்கள், சிறு, குறு விவசாயிகளுக்கு, 60 சதவீதம் தரப்படுகிறது. பிற விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்து டன், சூரிய கூடார உலர்த்தி வழங்கப்பட உள்ளது.இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் என்கிற அலுவலகத்தில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்புக்கு: 97866 68648

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X