இந்தியா

மீனவர்களுக்கு உபகரணம் வழங்க கோரிக்கை

Added : மே 20, 2020
Share
Advertisement

புதுச்சேரி; கடலின் சீற்றத்தால் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என புதுச்சேரி மீனவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, அதன் பொதுச் செயலாளர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை;கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையால், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அம்பான் புயல் காரணமாக மீன்வர்கள் கடலுக்கு செல்ல முடியவில்லை.கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது, கடல் சீற்றத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகு, மீன்பிடி வலைகள், இன்ஜின், ஜி.பி.எஸ்., கருவி உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்கள் கடலில் மூழ்கின.இதனால், படகு உரிமையாளர்களும், மீன்பிடி தொழிலாளர்களும் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு இழப்பீடு, படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X