திருவண்ணாமலை : செலவுக்கு பணம் தர மறுத்த தந்தையை, வெட்டி கொன்ற மகனை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆனந்தல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம், 65; விவசாயி. இவரது மகன் சுப்பிரமணி, 32; திருமணமாகி, மனைவி, குழந்தைகள் உள்ளனர். அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், விவசாய நிலத்தில் மாணிக்கம் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு, மது போதையில் வந்த சுப்பிரமணி, தந்தையிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.பணம் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, மாணிக்கத்தை கொடுவாளால் வெட்டி கொன்றார். அவரை, மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE