சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை வழக்கில் இருவருக்கு சிறை

Added : மே 20, 2020
Share
Advertisement
வெள்ளவேடு : வெள்ளவேடு அருகே நடந்த, வாலிபர் கொலை வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.வெள்ளவேடு அடுத்த, திருமழிசை, உடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆனந்தன், 38. மூன்று கொலை வழக்கில் தொடர்புடைய இவர், கடந்த மாதம், 23 இரவு, வீட்டின் பின்பகுதியில், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.இது குறித்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், இதே

வெள்ளவேடு : வெள்ளவேடு அருகே நடந்த, வாலிபர் கொலை வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளவேடு அடுத்த, திருமழிசை, உடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆனந்தன், 38. மூன்று கொலை வழக்கில் தொடர்புடைய இவர், கடந்த மாதம், 23 இரவு, வீட்டின் பின்பகுதியில், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், இதே பகுதியைச் சேர்ந்த ஜான்சன் மகன் எபி (எ) எபினேசன், 28 மற்றும் மணி மகன் திருப்பதி, 29, ஆகிய இருவரும் கொலை செய்தது தெரிய வந்தது.இதையடுத்து, வெள்ளவேடு போலீசார் இருவரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து, வெள்ளவேடு போலீசார் கூறுகையில், 'இந்த கொலை வழக்கில் ஏற்கனவே இதே பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர், 18, பிரபாகரன், 19, பழனி, 19 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகிறோம்' என, கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X