ஆர்.கே.பேட்டை: ஊராட்சி மன்ற தலைவருக்கு, தகவல் தெரிவிக்காமல், நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொண்டதை கண்டித்து, ஊராட்சி மன்ற தலைவர் நேற்று தன் ஆதரவாளர்களுடன், சாலை மறியலில் ஈடுபட்டார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சமரசம் செய்தார்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் ஊராட்சியில், சில நாட்களாக, நுாறு நாள் வேலை திட்டத்தின் கீழ் மீண்டும் பணிகள் நடந்து வருகின்றன.இது குறித்து, ஊராட்சி மன்ற தலைவருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை எனக்கூறி, நேற்று, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி, தன் ஆதரவாளர்களுடன், சாலை மறியலில் ஈடுபட்டார்.
அம்மையார்குப்பம் பஸ் நிலையம் அருகே நடந்த மறியலில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உடன், சம்பவ இடத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி வந்தார். மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தார். அவரது சமரசத்தை ஏற்று, மறியல் கைவிடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE