சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.68 லட்சம் கள்ளநோட்டு திருமயம் அருகே பறிமுதல்

Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 ரூ.68 லட்சம் கள்ளநோட்டு திருமயம் அருகே பறிமுதல்

புதுக்கோட்டை : திருமயம் அருகே, டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 68 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, மூங்கித்தான்பட்டி டாஸ்மாக் மதுக் கடையில், 16ம் தேதி, சிலர், 200 ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து, மது வாங்க முயன்றனர்.கடை விற்பனையாளர் முருகானந்தம், 48, திருமயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். தொடர் விசாரணையில், மணிகண்டன், 36, என்பவர் உட்பட, ஆறு ஆண்களை கைது செய்தனர். தொடர்ந்து, மணிகண்டன் வீட்டில் இருந்து, 65 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், கம்ப்யூட்டர், லேப் டாப், பிரின்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தவிர, ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட நிலையில் இருந்த, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-மே-202013:28:50 IST Report Abuse
கல்யாணராமன் சு. இப்படிப்பட்டவர்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்......... ஆபத்தானவர்கள் .......... தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் வெளியே வரமுடியாதபடி செய்யவேண்டும்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X