சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10ம் வகுப்பு பொது தேர்வுக்காக நடைபயணம் துவங்கிய மாணவி

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
10ம் வகுப்பு, பத்தாம்வகுப்பு, பொதுத்தேர்வு, நடைபயணம்,  இலங்கை அகதி முகாம், மாணவி, திருவண்ணாமலை, ராமநாதபுரம்,

திண்டுக்கல் : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக, இலங்கை அகதி முகாமில் வசிக்கும் மாணவி, ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து, திருவண்ணாமலைக்கு குடும்பத்துடன் நடைபயணம் மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே, பையூர் இலங்கை அகதி முகாமில் வசிப்பவர் நாகதீபன், 35. இவரது மகள் தீபலட்சுமி, 15; அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்.மார்ச்சில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அகதி முகாமில் நடந்த திருமண விழாவுக்காக, நாகதீபன் குடும்பத்துடன் சென்றார். ஊரடங்கால் ஊர் திரும்ப முடியவில்லை. தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதால், தேர்வில் பங்கேற்க தீபலட்சுமி ஆர்வம் காட்டினார். திருவண்ணாமலை செல்ல, 'இ - பாஸ்' பெற முயன்றும் முடியவில்லை. இதனால், மே, 16ல் நாகதீபன் குடும்பத்தினர், மண்டபத்தில் இருந்து நடைபயணமாக புறப்பட்டனர்.

வழியில் மீன், காய்கறி வாகனங்களில் பயணித்து, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வந்தனர். பின், நடைபயணத்தை தொடர்ந்தனர்.நேற்று திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதிகாரிகள் வந்து, கொரோனா சோதனை செய்தனர். போலீசார் உணவு ஏற்பாடு செய்து, திருவண்ணாமலை சென்ற வாகனத்தில், அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-மே-202008:01:32 IST Report Abuse
VENKATASUBRAMANIAN I do not understand instead of publishing news , dinamalr can help to get transportation and e pass from govt. This is the problem with media. Instead after arranging everythkng if you publish this which appreciable .
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
22-மே-202011:00:16 IST Report Abuse
Matt Pபத்திரிக்கைகளுடைய முக்கிய பணி முழு நேர பணி செய்திகளை வெளியிடுவது. அப்படியும் சில நேரங்களில் தேவையானவர்களுக்கு உதவியாக இருக்கிறார்களென்றால், அதை பாராட்டலாம். நம்ம நாட்டில் நிறைய பேர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் தொண்டு நிறுவனகளும் கண்டறிந்து உதவி செய்ய வேண்டும். புதிதாக தோன்றிய கட்சிகள் மனதார செய்வதோடு அவர்களுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்....
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-மே-202000:57:44 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் நன் மதிப்பெண்களுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள் குழந்தை.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-மே-202000:55:54 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் திருவண்ணாமலை செல்ல, 'இ - பாஸ்' பெற முயன்றும் முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X