சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது போதையில் தகராறு முதியவர் அடித்து கொலை

Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுக்கோட்டை : புதுக்கோட்டையில், மது போதையில் ஏற்பட்ட தகராறில், முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்தவர் சம்சுதீன், 70; சைக்கிளில் வீதி வீதியாக சென்று, பினாயில் வியாபாரம் செய்து, தனியாக வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டில், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, மது அருந்தியுள்ளார். அப்போது, போதையில் ஏற்பட்ட தகராறில், நண்பர்கள் சேர்ந்து, வீட்டில் இருந்த மரக்கட்டையால் சம்சுதீனை அடித்து கொலை செய்து, தப்பியோடினர். திருக்கோகர்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.'சரக்கால்' சாவுபுதுக்கோட்டை, ஆலங்குடி அரையப்பட்டியைச் சேர்ந்தவர் ரகுவரன், 26. இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மது அருந்தி, வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, போதையில் சாலையோரம் இருந்த, 50 அடி ஆழ கிணற்றில் தடுமாறி விழுந்து உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-மே-202005:26:26 IST Report Abuse
Mani . V எல்லாப் புகழும் எங்கள் கௌரவ டாக்டர் ஐயாவுக்கே வாழ்த்துக்கள் சார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X