பொது செய்தி

தமிழ்நாடு

வட மாநில தொழிலாளர்களை வெயிலில் காக்க வைத்து சோதனை

Added : மே 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 வட மாநில தொழிலாளர்களை வெயிலில் காக்க வைத்து சோதனை

செங்குன்றம் : வட மாநில தொழிலாளர்களை, வெயிலில் காக்க வைத்து, உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


சொந்த ஊர்


சென்னையின் சுற்று வட்டாரங்களில் இருந்து, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று மாலை, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்ல, பொன்னேரி தாலுகா, வருவாய் பேரிடர் மேலாண்மை நிர்வாகம் ஏற்பாடு செய்தது.அவர்கள், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுாரில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு உடல் வெப்ப மருத்துவ பரிசோதனை நடந்தது.

அதற்காக, அனைவரும், காலை, 8:00 மணி முதல், வெயிலில் காத்திருந்தனர்; 10:30 மணிக்கு காலை உணவு வழங்கப்பட்டது. வெயிலில் காத்திருந்து, உடல் வெப்ப பரிசோதனை செய்தவர்களுக்கு, வெப்பத்தின் அளவு கூடுதலாகவே இருந்தது.மேலும், வெயிலில் காத்திருந்ததால், பலரும் சோர்வடைந்தனர். அதை கண்ட சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினரிடம் முறையிட்டனர். இதையடுத்து, 11:00 மணி அளவில், அவர்களை, அங்குள்ள மரம் மற்றும் வகுப்பறை நிழலில் அமர வைத்தனர்.


நடவடிக்கை


அதன் பிறகு, பரிசோதனை தொடர்ந்தது. வட மாநில தொழிலாளர்களை வெயிலில் காக்க வைப்பது, தாமதமாக உணவு வழங்குவது போன்ற அலட்சியத்தை தவிர்க்க, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு. கூடுவாஞ்சேரி இது நமக்கு புதியதல்ல. ரேஷன், டாஸ்மாக் கடையில், முதல் நாள் சினிமா ரிலீசாகும் நாட்கள்,ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போன்ற பல விதங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தாங்களாகவே இன்னலைப் பொருட்படுத்தாமல் வெயிலில் நிற்கும் போது இதெல்லாம் சகஜம். ஆகையால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை.
Rate this:
Cancel
babu -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-202011:37:51 IST Report Abuse
babu இந்தியா ஏழை நாடு என்பது தெரியாதா? ஒதுக்கப்படும் கோடி கோடி பட்ஜெட்கள் எல்லாம் பல கமிசன்களை தாண்டி மக்களை சென்றடையும் போது ரேசன் அரிசி தரத்தில்தான் இருக்கும் என்பது தெரியாதா?
Rate this:
Cancel
20-மே-202009:59:11 IST Report Abuse
உஷா வாசுதேவன் ஏற்கனவே நோயின் தாக்கம் வறுமையின் தாக்கம் இப்போது வெயிலின் தாக்கம். நிழல் தரும் இடங்களே சென்னையில் கிடையாதா. குடிநீர் .தற்காலிக பந்தலாவது (ஷாமியானா) அமைக்க கூடாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X