பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கில் உன்னத சேவை; பரிசளித்து போலீசார் நன்றி

Added : மே 20, 2020
Share
Advertisement
 ஊரடங்கில் உன்னத சேவை; பரிசளித்து போலீசார் நன்றி

திருவொற்றியூர் : ஊரடங்கில் உன்னத சேவையாற்றும், போக்குவரத்து போலீசாருக்கு, 53 நாட்களாக தேநீர் வழங்கிய, தனியார் நிறுவன ஊழியருக்கு, போலீசார் பரிசளித்து பாராட்டு தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச், 24, நள்ளிரவு முதல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டனர். இது, வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.திருவொற்றியூர் போக்aகுவரத்து போலீசாருக்கு, எல்லையம்மன் கோவில் சந்திப்பைச் சேர்ந்த, தனியார் நிறுவன ஊழியரான சரவணன் மற்றும் நிஷாந்தினி ஆகியோர், கடந்த, 53 நாட்களாக, வீட்டிலேயே தயாரித்த தேநீர், கப சுர குடிநீர், ஜூஸ் வழங்கி வந்துள்ளனர்.

மேலும், வீட்டில் தயாரித்த, தானியங்கி கிருமி நாசினி இயந்திரத்தையும், போக்குவரத்து போலீசாருக்கு வழங்கியுள்ளனர்.இவர்களின் தன்னார்வத்தை பாராட்டி, போக்குவரத்து போலீசார், அவர்களுக்கு பரிசளித்து, நன்றி தெரிவித்தனர்.பேரிடர் காலங்களில், துளிர்க்கும் மனித நேயம். இந்த சுகாதார பேரிடரிலும் வெளிப்பட்டுள்ளதை, இந்த சம்பவம் பறைசாற்றியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X