பொது செய்தி

தமிழ்நாடு

'கமிஷன்' முகவர்களுக்கு சென்னை கலெக்டர், 'கல்தா'

Added : மே 20, 2020
Share
Advertisement

சென்னை : நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, உதவித் தொகைகளில், 'கமிஷன்' பிடித்து, முறைகேடில் ஈடுபட்ட, இரு வங்கி முகவர்களை, சென்னை கலெக்டர் பணி நீக்கம் செய்து, அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

கிண்டி தாலுகாவிற்கு உட்பட, தி.நகர், காமராஜர் காலனி, கண்ணம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், வங்கி முகவர்கள், உதவித் தொகைகளில், கமிஷன் எடுத்துக் கொண்டு, பணம் வழங்குவதாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, இது குறித்து விசாரிக்கும்படி, கிண்டி தாசில்தாருக்கு, சென்னை கலெக்டர் சீதாலட்சுமி உத்தரவிட்டார். விசாரணையில், எஸ்.பி.ஐ., வங்கியைச் சேர்ந்த, இரு முகவர்கள் முறைகேடில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து, இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

முறைகேடில் ஈடுபட்ட இருவரும், கணவன் -- மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.வரும் காலங்களில், இதுபோல் முறைகேடில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டால், சட்டப்படியான நடவடிக்கை பாயும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X