மடிப்பாக்கம் : மடிப்பாக்கம், நீர்நிலை புனரமைப்பு இயக்கத்தின் சார்பில், மூவரசம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, முழு உடல் கவச உடைகள் வழங்கப்பட்டன.
ஊரடங்கு காலத்தில், மடிப்பாக்கம் நீர்நிலை புனரமைப்பு இயக்கத்தின் சார்பில், ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து, பல்வேறு நிவாரண சேவைகள் செய்து வருகின்றனர்.இதில், பள்ளிக்கரணையில் தங்க வைக்கப்பட்ட கூலித் தொழிலாளர்களுக்கு, இலவச தேநீர், சிற்றுண்டி, பல பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு உணவு தயாரித்து வழங்குதல், நிவாரண உதவிகள் செய்தல் உள்ளிட்டவை, கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில், 80 சவரத் தொழிலாளர்களுக்கு, சேவா பாரதி அமைப்புடன் இணைந்து, அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மூவரசம்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களுக்கு, முழு உடல் கவச உடைகள் நேற்று வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE