தமிழ்நாடு

மாற்று இடத்திற்கு செல்ல வியாபாரிகள் எதிர்ப்பு; ரூ.100 கோடி பொருட்கள் நாசமாகும் அவலம்

Added : மே 20, 2020
Share
Advertisement

கோயம்பேடு: கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் மூடப்பட்டதால், 100 கோடி ரூபாய் பொருட்கள் நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சி.எம்.டி.ஏ., அறிவித்த மாற்று இடத்திற்கு செல்ல வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னையில் வேகமாக கொரோனா பரவியதால், கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. இதில், கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டும் மூடப்பட்டது.இதில், 17 ஏக்கரில் அமைந்துள்ள உணவு தானிய மார்க்கெட்டில், 496 கடைகள் உள்ளன. இதையடுத்து, உணவு தானிய வணிகர் சங்கத்தின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில், சிறப்பு அதிகாரி, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி மற்றும் காவல் துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை, வரும், 26க்கு ஒத்திவைத்தனர்.இந்நிலையில், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தலைமையில், உணவு தானிய வியாபாரிகளுடன், கோயம்பேடு அங்காடி நிர்வாக குழு அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் உள்ள லாரி பார்க்கிங் யார்டில், உணவு தானிய மார்க்கெட் அமைக்க இடம் அளிப்பதாக, சி.எம்.டி.ஏ., தெரிவித்தது. இதற்கு, உணவு தானிய வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.உணவு தானிய மார்க்கெட்டில், காய்கறி மார்க்கெட் போல மக்கள் கூட்டம் அதிகம் கூட வாய்ப்பில்லை. இதனால், மார்க்கெட்டை சுத்தம் செய்து, அரசு அறிவிக்கும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, இடைவெளி விட்டு வியாபாரம் செய்ய தயார் என, வியாபாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, துணை முதல்வருடன் ஆலோசித்து, பதில் அளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்க தலைவர், பி.மணிவண்ணன் கூறியதாவது:ஒரு உணவு தானிய கடையில், 250க்கும் மேற்பட்ட பொருட்கள் இருக்கும். சி.எம்.டி.ஏ., ஒதுக்கும் இடத்தில், பொருட்களை அடுக்கி வைப்பது கடினம். மாற்று இடத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து கடைகள் அமைத்தாலும், இரண்டு - மூன்று மாதத்தில் திருப்பி கோயம்பேடு வர வேண்டும். அந்த வீண் செலவை தவிர்த்து, கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டை சுத்தம் செய்து கொடுத்தால், சிறப்பாக இருக்கும்.

இங்கு காய்கறி மார்க்கெட் போல், மக்கள் கூட்டம் அதிகம் வராது. மேலும், 17 ஏக்கரில் இருக்கும் கடைகளை, 5 ஏக்கர் இடத்திற்கு மாற்றினால், இட நெருக்கடி ஏற்படும், இடைவெளி பின்பற்ற முடியாது. எங்கள் மார்க்கெட்டில், 30 சதவீதம் பெண்கள் வேலை செய்கின்றனர். மஞ்சம்பாக்கத்தில் உள்ள, லாரி பார்க்கிங் யார்டிற்கு சென்றால், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.

மார்க்கெட் திடீரென மூடப்பட்டதால், 100 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள், கடைகளில் மாட்டியுள்ளன. மளிகைப் பொருட்களை எலி சாப்பிட வாய்ப்புள்ளது. மேலும், ரவை, அரிசி, பருப்பு போன்றவை, பூச்சி, வண்டு வந்து நாசமாகும். மாற்று இடம் வேண்டாம், மார்க்கெட்டை திறந்து கொடுங்கள் என, கேட்டுள்ளோம். துணை முதல்வருடன் பேசி, முடிவை தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X