கணக்கெடுப்பில் தொய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கணக்கெடுப்பில் தொய்வு

Added : மே 20, 2020
Share
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும், தொற்று பரவாமல் தடுக்க, 90 நாட்களுக்கு, 16 ஆயிரம் ஊழியர்களை வைத்து, கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.ஒரு நபருக்கு, 100 வீடுகள் பிரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும், 60 வயதுக்கும் மேற்பட்டோர் விபரங்களையும் கணக்கெடுத்து வருகின்றனர்.இப்பணியில், ஒப்பந்த ஊழியர்கள்

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து வீடுகளிலும், தொற்று பரவாமல் தடுக்க, 90 நாட்களுக்கு, 16 ஆயிரம் ஊழியர்களை வைத்து, கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

ஒரு நபருக்கு, 100 வீடுகள் பிரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும், 60 வயதுக்கும் மேற்பட்டோர் விபரங்களையும் கணக்கெடுத்து வருகின்றனர்.இப்பணியில், ஒப்பந்த ஊழியர்கள் மட்டும் இல்லாமல், மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆரம்பத்தில், ஊக்கத்தொகை அளிப்பதாக கூறப்பட்டது.

ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், ஊக்கத்தொகை கேட்டபோது, ஒப்பந்த ஊழியர்களுக்கு மட்டுமே சம்பளம் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால், அதிருப்தி அடைந்த சுகாதார ஊழியர்கள், கணக்கெடுப்பில் ஆர்வம் காட்டுவதில்லை; பல இடங்களில், கணக்கெடுப்பு நடத்துவதில்லை. இதனால், இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X