தமிழ்நாடு

சென்ட்ரலுக்கு படையெடுப்போரை தடுக்கும் போலீசார்

Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 சென்ட்ரலுக்கு படையெடுப்போரை தடுக்கும் போலீசார்

சென்னை: ரயில் நிலையம் நோக்கி நடந்து செல்லும் வட மாநில தொழிலாளர்களை, ஆங்காங்கே தடுக்கும் போலீசார், மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள, சமூக நலக் கூடங்களில் தங்க வைத்து உள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சென்னையில் பல வகையான தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். கொரோனா பாதிப்பால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து உள்ளனர்.அவர்களை, மாநில நிர்வாகத்தின் அனுமதி அடிப்படையில், சிறப்பு ரயில்கள் மூலம், தமிழக அரசு அனுப்பி வைக்கிறது. ஆனால், சில மாநில அரசுகள் அனுமதி வழங்குவதில், கால தாமதம் செய்வதால், அம்மாநில தொழிலாளர்களை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வாடகை வீடுகளில் இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வாடகை கொடுக்க முடியாமல், வீட்டை காலி செய்து, சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி நடக்கின்றனர். குறிப்பாக, புறநகர் பகுதியில் இருந்து அதிகமானோர் செல்கின்றனர்.அவர்களை, ஆங்காங்கே தடுத்து நிறுத்தியதுடன், சில இடங்களில், போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில், வீட்டை காலி செய்து சாலைக்கு வருவோரை, ரயிலில் அனுப்பும் வரை, ஆங்காங்கே உள்ள சமூக நலக்கூடங்களில் தங்க வைக்க, மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக, அந்தந்த காவல் நிலையத்தில் பதிவு செய்து, அருகில் உள்ள சமூக நலக்கூடத்தில், வட மாநிலத்தவரை தங்க வைக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி வழங்கப்படுகின்றன.சிறப்பு ரயிலில் அனுப்பும் வரை, தங்க வைத்து, தேவையான உதவிகளை செய்து கொடுக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மே-202021:25:34 IST Report Abuse
ஆப்பு இந்த ஒருமுறை ஊருக்கு போயிடறோம் சாமி. இனிமே இந்தப் பக்கம் தலை வெச்சு படுக்கமாட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X