'ஏழை குழந்தைகளுக்கு ரூ.75 லட்சம் கோடி நிதி ஒதுக்குங்கள்'

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
poor children, nobel prize, kailash satyarthi, fund, Nobel laureates

வாஷிங்டன்: கொரோனா ஊரடங்குக்கு பிறகு, உலகில் உள்ள ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காக, அனைத்து நாட்டு அரசுகளும் ஒன்றிணைந்து, 75 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்' என, அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் கைலாஷ் சத்தியார்த்தி உட்பட, நோபல் வென்ற 88 உலக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால், சர்வதேச அளவில், பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு பிறகான காலகட்டத்தில், ஏழை எளிய குழந்தைகளின் நலன் குறித்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, திபெத்தை சேர்ந்த புத்த மத துறவி தலாய் லாமா, பிரிட்டன் முன்னாள் பிரதமர் கார்டன் ப்ரவுன், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் கைலாஷ் சத்தியார்த்தி உட்பட, நோபல் வென்ற 88 உலக தலைவர்கள், சில எதிர்கால திட்ட அறிக்கையை முன் வைத்துள்ளனர்.


latest tamil news


இது தொடர்பாக அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து நாட்டு அரசாங்கங்களும், தங்கள் கொரோனா நிவாரண நிதியில் இருந்து, 20 சதவீதத்தை, ஏழை எளிய மக்களுக்கு செலவிட வேண்டும். இதன் மூலம், ஒரு கோடி உயிர்கள் பாதுகாக்கப்படும்.ஊரடங்கு மற்றும் அதற்கு பிறகான காலகட்டத்தில், ஏழை எளிய குழந்தைகளின் நலனுக்காக, 75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப்பட வேண்டும். இந்த தொகை, ஐ.நா.,வின் கொரோனா நிவாரண பணிகளுக்கு, செலவிடப்பட வேண்டும்.

குறைந்த வருவாய் உள்ள மக்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு கடன் தள்ளுபடி வழங்கப்பட வேண்டும். சுகாதாரம், குடிநீர், துப்புரவு மற்றும் கல்விக்கான நிலையான வளர்ச்சி திட்டங்களுக்கு, இந்த தொகை, பெரிதும் உதவும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
IYER AMBI - mumbai,இந்தியா
20-மே-202009:56:59 IST Report Abuse
IYER AMBI 75 lakh crores. Good Idea, but where from this money will come - from honest tax payers? During the british rule onwards the government, politicians are eradicating the poverty, draining crores of tax payers money. Where is the result? Instead advise people that you have to work hard and earn your bread. Do not spend your hard earned money in liquor, instead save the money to meet the difficult times. you have given preferential treatment fr decades, where is the progress. The deprived people survive by their discipline in living. This is the time to change the equation and a new meaningful world. There should be no free meals.
Rate this:
KUNDRATTHU BAALAA - TPK., MARUTHA,இந்தியா
20-மே-202012:32:28 IST Report Abuse
 KUNDRATTHU BAALAARemoval of poverty is only on paper for decades.. the fun is that haven'ts are going on Producing children irrespective of their capacity to rear them and longing for food and basic aminities from govts... are we need late Sanjai Gandi type of pple to tackle this kind of population explosion menace......
Rate this:
Cancel
Sapere Aude -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-202008:08:27 IST Report Abuse
Sapere Aude நல்லதொரு முயற்சி. பணம் மட்டும் இருந்தால் போதாது. நல்ல மனமும் வேண்டும். நம்நாட்டில் பணம் நிறைய இருக்கிறது அதை எடுத்து ஏழ்மையை ஒழிக்க மனம் இடம் கொடுக்க வில்லையே ! மக்கள் இனப்பெருக்கத்தை சற்று நிருத்தவேண்டும். அரசும் இதில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து உதவவேண்டும்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
20-மே-202005:56:25 IST Report Abuse
 Muruga Vel இவர் சொல்ற திட்டம் மேலும் மேலும் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறதே ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X