8 மாதங்களுக்கு முன்பே கொரோனா உருவானது; ஸ்பெயின் விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்| Coronavirus may have silently existed in China as early as last October | Dinamalar

8 மாதங்களுக்கு முன்பே 'கொரோனா' உருவானது; ஸ்பெயின் விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (5)
Share
University of Barcelona, Spain coronavirus, covid 19, coronavirus, China, Spain, கொரோனா, வைரஸ்

லண்டன் : சீனாவில், கொரோனா வைரஸ் எட்டு மாதங்களுக்கு முன்பே உருவாகி, அறிகுறி ஏதுமின்றி அமைதியாக இருந்திருக்கலாம் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு, டிசம்பரில், சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில், முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த வைரஸ், கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலேயே, வூஹான் மக்களிடம் அமைதியாக பரவ ஆரம்பித்திருக்கலாம் என, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பல்கலை., விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து, இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு, அக்., - நவ., மாதங்களில், வவ்வால்களிடம் தோன்றிய வைரஸ், அடையாளம் தெரியாத பிராணி அல்லது பிராணிகளின் பாகங்களில் பரவி உள்ளது.அந்த சமயத்தில், சீனாவில், அடுத்தடுத்து மூன்று பெரிய திருவிழாக்கள் வந்ததையொட்டி, உயிருள்ள பிராணிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது.


latest tamil news


இந்த வகையில், அறிகுறியின்றி அமைதியாக பரவிய கொரோனா, டிசம்பரில், திருவிழா காலத்தில் அதிக மக்கள் கூடிய போது, வேகமாக பரவி, பாதிப்பை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, வூஹான் நகரில், சீனாவின் புத்தாண்டுக் கொண்டாட்டம், குடும்ப விருந்து என்ற இரு பெரிய விழாக்களும், அவற்றில் மக்கள் அதிக அளவில் கூடியதும், கொரோனா பரவ முக்கிய காரணம்.

சீனாவில், 'சார்ஸ்' வைரஸ் தோன்றியதற்கும், வவ்வால்கள், எறும்புத் தின்னிகள் உள்ளிட்ட பிராணிகளுக்கும் தொடர்பு உள்ளது. ஆனால், வைரஸ் பாதித்த முதல் மனிதர் யார் என்பது தான் தெரியவில்லை.வைரஸ் பரவ, பல காரணிகள் துணை புரிகின்றன. வைரஸ் ஆய்வுக் கூடங்கள் கூட, வைரஸ் பரவ உதவுகின்றன.முதல் வைரஸ், கிராமப்புற பண்ணைகளில் பரவ ஆரம்பித்திருக்க கூடும்.

ஏனெனில், கிராமப்புறச் சூழல், கொரோனா வைரஸ் பரவ, சாதகமான அம்சங்களை கொண்டுள்ளது. இனி, கொரோனா வைரஸ் போல, மேலும் பல வைரஸ்கள் தோன்றி, பரவ வாய்ப்புள்ளது. தற்போது, கொரோனா வைரஸ், அர்போ வைரஸ், இன்புளுயன்சா வைரஸ் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புதான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X