சீனாவில் மீண்டும் தலைகாட்டும் கொரோனா

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020
Share
Advertisement
China, covid 19, coronavirus, coronavirus new cases, coronavirus outbreak, சீனா, கொரோனா, வைரஸ்

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வைரஸ் தலைகாட்ட துவங்கி உள்ளது.

கடந்த ஆண்டு, சீனாவில் முதன் முதலாக, வூஹான் நகரில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், கடந்த மாதம், இந்நகரில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊரடங்கு விலக்கப்பட்டு, மக்களும் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், சீனாவில் நேற்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர், வூஹான் நகரைச் சேர்ந்தவர். நோய் அறிகுறி இல்லாமல், 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 285 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வூஹானில், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X