தமிழ்நாடு

முதலில் அறிவுரையுடன் முக கவசம்; மறுமுறை கண்டிப்புடன் அபராதம்

Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
முதலில் அறிவுரையுடன் முக கவசம்; மறுமுறை கண்டிப்புடன் அபராதம்

எண்ணுார் : முதல் முறை முக கவசம் அணிய அறிவுறுத்தும் மாநகராட்சி அதிகாரிகள், மறுமுறையும் விதியை மீறினால், அபராதம் விதிக்கின்றனர்.

கொரோனா வைரசின் தீவிரம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சியில், 7,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மண்டலங்களை ஒப்பிடும்போது, முதல் மண்டலமான, திருவொற்றியூரில் பாதிப்பு குறைவு தான். இங்கு, 163 பேர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தொற்று பரவா வண்ணம், சென்னை மாநகராட்சி முழுதும், முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது; மீறுவோருக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட, எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில், முக கவசம் அணியாமல், இரு சக்கர வாகனங்களில் வரும், வாகன ஓட்டிகளை மடக்கும் மாநகராட்சி அதிகாரிகள், முக கவசம் அணிய அறிவுறுத்துகின்றனர்.முதல் முறை என்பதால், அறிவுரையுடன் இலவசமாக முக கவசமும் வழங்கினர். மறுமுறையும், விதியை மீறுபவர்களை கண்டிக்கும் அதிகாரிகள், 100 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளின் இந்த அதிரடியால், எண்ணுாரில் ஏறக்குறைய, 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள், முக கவசம் அணிந்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
20-மே-202023:02:59 IST Report Abuse
JAYARAMAN அப்படி அபராதம் வாங்கும் போது, இலவசமாக ஒரு , தோய்க்கக் கூடிய முக கவசம் கொடுத்து, உடனடியாக அணிய வைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X