முக்கிய தெருக்களில், வாஷ் பேசின்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முக்கிய தெருக்களில், 'வாஷ் பேசின்'

Added : மே 20, 2020
Share
 முக்கிய தெருக்களில், 'வாஷ் பேசின்'

சென்னை : கொரோனா பரவலை தடுக்க, குடிசை பகுதியில் உள்ள முக்கிய தெருக்களில், 'வாஷ் பேசின்' தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, குடிசை மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகள், தீவிர கண்காணிப்பில் உள்ளன.தொற்று பரவுவதைத் தடுக்க, குடிசை பகுதியில் வசிப்போருக்கு, முக கவசம், சோப்பு வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், அதிக வீடுகள் கொண்ட முக்கிய தெரு சந்திப்பில், மாநகராட்சி சார்பில், வாஷ் பேசின் தொட்டி அமைக்கும் பணி நடக்கிறது.மக்கள் தொகைக்கு ஏற்ப, 500 --- 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, தண்ணீர் தொட்டி வைக்கப்படுகிறது. அதில், நான்கு மற்றும் ஆறு எண்ணிக்கையில் வாஷ் பேசின் அமைக்கப்படுகிறது.

அதில், கையை சுத்தம் செய்யும் சோப்பு ஆயில் வைக்கப்படும். வேலை மற்றும் இதர தேவைகளுக்கு வெளியே சென்று வீடு திரும்புவோர், வாஷ் பேசினில் கையை சுத்தம் செய்து விட்டு, வீடு செல்ல வேண்டும்.எப்படி கை கழுவ வேண்டும்; சோப்பு ஆயில் எவ்வளவு பயன்படுத்த வேண்டும்; கை கழுவியபின் குழாயை மூடுவது எப்படி போன்ற விழிப்புணர்வு வாசகங்கள், தொட்டியில் எழுதப்படும்.

இதன்மூலம், குடிசை பகுதியில் வசிப்போருக்கு, கையை சுத்தம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுவதுடன், தொற்று பரவலும் தடுக்கப்படும் என, அதிகாரிகள் நம்புகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X