கடவுளே நீரில் மூழ்க விடாமல் காப்பாற்று : மே.வங்க இளைஞன் வேண்டுதல்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோல்கட்டா: கடவுளே நீரில் மூழ்க விடாமல் காப்பாற்று என்ற வேண்டுதலுடன் மே.வங்க இளைஞர் ஒருவர் தினமும் இரண்டு மணி நேரம் நீந்தி சென்று பணிக்கு செல்கிறார், மேற்கு வங்க மாநிலம் மேற்கு பர்த்வான் கிராமத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் பால் இவர் நாடியா மாவட்டத்தில் உள்ள நகை கடை ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். இவரது ஊரில் இருந்து நாடியாவிற்கு வருவதற்கு படகு மூலம் தான்

கோல்கட்டா: கடவுளே நீரில் மூழ்க விடாமல் காப்பாற்று என்ற வேண்டுதலுடன் மே.வங்க இளைஞர் ஒருவர் தினமும் இரண்டு மணி நேரம் நீந்தி சென்று பணிக்கு செல்கிறார்,latest tamil newsமேற்கு வங்க மாநிலம் மேற்கு பர்த்வான் கிராமத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் பால் இவர் நாடியா மாவட்டத்தில் உள்ள நகை கடை ஒன்றில் பணிபுரிந்துவருகிறார். இவரது ஊரில் இருந்து நாடியாவிற்கு வருவதற்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும். கொரோனா வைரஸ் காரணத்தால் அப்பகுதியில் படகு சேவை நிறுத்தப்பட்டது.

தன்னை நம்பி உள்ள குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றுவதற்காக ஹூக்ளி ஆற்றை தினமும் இரண்டு மணி நேரம் ,தொடர்ந்து 20 நாட்களாக கடந்து வந்துள்ளார், இது குறித்து அவர் கூறியதாவது: நான் ஒருவன் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளேன். எனது கடை உரிமையாளர் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடைக்காது என கூறினார். ஊடரங்கிற்கு முதல்நாள் வரையில் படகு சேவையை பயன்படுத்தினேன் . படகு சேவை நிறுத்தப்பட்ட பின்னர் வேறு வழி இல்லாமல் நீந்த துவங்கினேன்,

துவக்கத்தில் வாழை மர பட்டைகளை ஒன்றாக இணைத்து பயணித்தேன் ஆனால் அவை அதிக அலைகள் மற்றும் வலுவான நீரோட்டத்தால் அவை பயனளிக்காமல் போனது. எனவே நீச்சலை உபயோகித்தேன். நான் ஓரு திறமையான நீச்சல் வீரர் இல்லை.இருப்பினும் ஒவ்வொரு நாளும் கடவுளே என்னை நீரில் மூழ்க விடாமல் காப்பாற்றுங்கள் என்று பிரார்த்தித்து நீந்துகிறேன்.

காலையில் பணிக்கு புறப்பட்டு நதி கரைக்குவந்த உடன் நீச்சல் உடைக்கு மாறுவதாகவும் நகை கடையின் சீருடை பாலிதீன் பையில் வைத்து கொண்டு ஆற்றை நீந்தி கடந்து வருவேன். மறு கரையில் என்னை உலர்த்தி கொண்டு நகை கடை சீருடை அணிந்து கொள்வேன். இவ்வாறு லால் கூறினார்.


latest tamil newsலாலின் நிலைமை குறித்து உள்ளூர் திரிணமுல் காங்கிரஸ் பஞ்.,தலைவரிடம் கூறியபோது நாங்கள் இது குறித்து கேள்விப்பட வில்லை. லால் ஊர் பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்வதற்கு படகு சேவைகளை பயன்படுத்த முடியுமா என்ப து குறித்து ஆராயப்படும் என பஞ்., தலைவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
21-மே-202022:27:35 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி மத்திய மாநில அரசுகள் இவரது நிலையைப் பார்த்து இவருக்கு உதவ முன்வரவேண்டும்.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
20-மே-202019:36:33 IST Report Abuse
S. Narayanan ulloor arasiyalvaathigal enna seikirargal theriyavillai.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-மே-202017:12:56 IST Report Abuse
Endrum Indian He should have said "Allah Save me" He would have got at his home the help from Muslim Begum Mumtaj
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
20-மே-202023:41:04 IST Report Abuse
தல புராணம்இதிலே சோகம் என்னான்னா, உயிரைவிட மேலாக தனது குடும்பத்தை நேசிக்கும் இந்த இளைஞரால் இரண்டு மணி நேரம் நீந்தியாவது வேலை செய்து கொஞ்சமாவது காப்பாற்ற வழி உள்ளது. ஆயிரம் கிலோமீட்டர் நடக்கும் அந்த கோடி புலன்பெயர்ந்த தொழிலாளர் தோழர்களுக்கும் இதே உந்துதல் தான். குடும்பத்துக்கு ஒரு நல்ல இடம், அந்த குழந்தைக்கு ஒரு மரியாதையான ஒரு வேளை உணவு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X