பொது செய்தி

தமிழ்நாடு

பணிகளை பிரித்து வழங்கிய அதிகாரி; கொரோனா அறிக்கை தயாரிப்பில் குளறுபடி

Added : மே 20, 2020
Share
Advertisement

அடையாறு : அடையாறு மண்டலத்தில், அறிக்கை தயாரிப்பு பணியில் குளறுபடி ஏற்பட்டதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகள், சுகாதார அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

அடையாறு மண்டலத்தில், கொரோனா பாதிப்பு, 500ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த மண்டலத்தில், முதல்வர், அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் உள்ளன.இதனால், வைரஸ் தடுப்பு நடவடிக்கையை, மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது. மண்டலத்தில், துறைகள் ஒருங்கிணைப்பு இல்லாத பிரச்னை, அடிக்கடி தீவிரமடைகிறது.

கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை, தடை செய்யப்பட்ட பகுதி தொடர்பான அறிக்கையை, தினசரி உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.மண்டல சுகாதார நல அலுவலர், துப்புரவு அதிகாரி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததால், அறிக்கை தயாரிப்பில் சொதப்பல் ஏற்பட்டுள்ளது.கொரோனா பாதித்தவர்கள், குணமடைந்தவர்கள் குறித்த விபரங்களை, மண்டல சுகாதாரத்துறை தயாரித்து, மேல் அதிகாரிகளுக்கு அனுப்பிய அறிக்கையில், முரண்பாடு இருந்ததால், நிர்வாக ரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்து, மண்டல அதிகாரி, ஒவ்வொரு பணியையும், சுகாதார அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி உத்தரவிட்டுள்ளார். அறிக்கை தயாரித்தல், சமுதாய நலக்கூடம், தனிமைப்படுத்துதல், அவசர ஊர்தி, வாகனங்கள் ஏற்பாடு, தனிமை முகாம்கள் கண்காணிப்பு போன்ற பணிகள், நான்கு துப்புரவு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

மேலும், மண்டல நல அலுவலக கணினி அறிக்கை தொடர்பான பணிகள், பரிசோதனை மையம் கண்காணிப்பு, அறிக்கை தயாரிப்பு, கிருமி நாசினி தெளிப்பு, கொரோனா தகவல்களை சேகரித்தல், நடவடிக்கை, தனிமை முகாம் பரிசோதனை கூடம் போன்ற பணிகள், ஏழு சுகாதார ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.இதன் மூலம், நிர்வாக குளறுபடி இல்லாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமடையும் என, மண்டல அதிகாரிகள் நம்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X