சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் தகராறு; போலீசாரிடம் விசாரணை

Added : மே 20, 2020
Share
Advertisement

வில்லிவாக்கம் : மது போதையில், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் தகராறில் ஈடுபட்ட போலீசாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

வில்லிவாக்கம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர், யுவராஜ், 28; ஆயுதப்படை காவலர். நேற்று முன்தினம் இவருக்கு பிறந்த நாள் என்பதால், காவலர் ஜெகதீஷ், 27, என்பவரை, தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். பின் இருவரும், இரவு மது அருந்தியபடி, சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டில் வசிப்போர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த காவலர்கள் இருவரும், பக்கத்து வீட்டில் வசிப்போரை ஆபாசமாக பேசியுள்ளனர்.

அவர்கள், இது குறித்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த வில்லிவாக்கம் போலீசார், போதையில் தகராறில் ஈடுபட்ட காவலர்களை, ரோந்து வாகனத்தில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X