சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால் டாக்சி ஓட்டுனர்கள் கையேந்தும் போராட்டம்

Added : மே 20, 2020
Share
Advertisement

கிண்டி : கார் ஓட்ட அனுமதி அளிக்கக் கோரி, கால் டாக்சி ஓட்டுனர்கள், கிண்டியில், கையேந்தும் போராட்டம் நடத்தினர்.

ஊரடங்கால், பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால், கால் டாக்சி ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுடன், கால் டாக்சி ஓட்ட அனுமதிக்க கோரி, 'சிறகுகள்' கால் டாக்சி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், நேற்று, கிண்டி, ஈக்காடுதாங்கல் பகுதியில், கையில் தட்டு வைத்து, கையேந்தும் போராட்டம் நடத்தினர்.கிண்டி போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

ஓட்டுனர்கள் கூறியதாவது: வேலை இல்லாததால், குடும்பம் நடத்த, கடன் அடைக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். அரசு விதிகளுக்கு கட்டுப்பட்டு, கார் ஓட்ட தயாராக இருக்கிறோம். காரை, அடிக்கடி கிருமி நாசினி தெளித்து சுகாதாரமாக வைத்திருப்போம். எங்கள் நிலை கருதி, கார் ஓட்ட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

s vinayak - chennai,இந்தியா
20-மே-202009:13:56 IST Report Abuse
s vinayak எத்தனை முறை அவசரகாலங்களில் சிறிதும் தாட்சண்யம் இல்லாமல் booking-ஐ cancel பண்ண சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X