புனே: புனேயில் கொரோனா காரணமாக திருமணத்தை தள்ளி வைத்து தன் திருமண செலவுக்கு வைத்திருந்த இரண்டு லட்சம் ரூபாயில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தினம் உணவளித்து வருபவர் அக் ஷய் கோத்தவாலே.

ஆட்டோ ஓட்டுனரான இவரின் தந்தை நேற்று திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது ஏழைகளுக்கு உணவு வழங்குவதில் ஈடுபட்டிருந்த காரணத்தால் தந்தையை பார்க்க அக் ஷய் கோத்தவாலே மருத்துவமனைக்கு செல்லவில்லை. சிறிது நேரத்தில் தந்தை இறந்த செய்தியைத் தான் அவரால் கேட்க முடிந்தது.

இந்நிலையில் தந்தையின் ஈமக் கிரியையொட்டி நேற்று உணவு வழங்குவதை நிறுத்திய அக் ஷய் இன்று முதல் மீண்டும் உணவு வழங்கப் போவதாக தெரிவித்துள்ளார். தந்தை இறந்த துக்கத்திலும் அவரின் பொதுச் சேவை பலரின் பாராட்டுதலை பெற்றுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE