கூகுளில் உணவு, மருந்து, ஹோம் ஒர்க் தேடல் அதிகரிப்பு| Food, medicines, work from home, most searched on Google | Dinamalar

கூகுளில் உணவு, மருந்து, ஹோம் ஒர்க் தேடல் அதிகரிப்பு

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020
Share
சான் பிரான்சிஸ்கோ: கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, ஹோம் ஒர்க்குக்கான தேடல் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் தொற்றால் அமெரிக்கர்கள் பெரும்பாலோனோர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வீட்டில் ஓய்வு நேரத்தின் போது உணவுக்கான தேடலில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது 300

சான் பிரான்சிஸ்கோ: கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, ஹோம் ஒர்க்குக்கான தேடல் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.



latest tamil news



உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் தொற்றால் அமெரிக்கர்கள் பெரும்பாலோனோர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். வீட்டில் ஓய்வு நேரத்தின் போது உணவுக்கான தேடலில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது 300 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

மேலும் சமையல் தொடர்பான வீடியோக்கள் கடந்த ஆண்டை காட்டிலும் 31 சதவீதம் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது. இதே போல் ஆன்லைன் மருந்தகத்திற்கான தேடல்கள் உலகளவில் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்தது மட்டுமல்லாமல், நுகர்வோரின் நலன்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் வாங்கும் சக்தி ஆகியவற்றை மாற்றியுள்ளன.

மேலும் இந்த நெருக்கடி எப்படி அல்லது எப்போது தீர்க்கப்படும் என்று எங்களுக்குத் தெரியாது என்றாலும், மக்களின் தேவைகள் மற்றும் நடத்தைகள் எவ்வாறு மாறுகின்றன என்பது பற்றிய புதிய நுண்ணறிவு எங்களிடம் உள்ளது, ”என்று கூகுள் விளம்பர குழு கூறி உள்ளது.


latest tamil news



கவலை மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்க மக்கள் ஆன்லைன் வீடியோவை நோக்கி வருகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில், தியானம் தொடர்பான வீடியோக்களின் பார்வைகள் 2019 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 51 சதவீதம் அதிகரித்துள்ளது

பள்ளி மூடல் மற்றும் வீட்டிலேயே கல்விக்கு ஏற்ப பெற்றோர்களும் மாணவர்களும் யூடியூப்பை
அதிகம் பார்க்க துவங்கி உள்ளனர்.

யூடியூப் தரவுகளின்படி, உலகளவில் 'ஹோம் ஸ்கூல்' கொண்ட வீடியோக்களின் காட்சிகள் 2020 மார்ச் மாதத்திலிருந்து 120 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளன.

மேலும் “விளையாட்டுகள்,” “புதிர்கள்” மற்றும் “வண்ணமயமான புத்தகங்கள்” ஆகியவற்றிற்கான தேடல் ஆர்வம் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து அதிகரித்துள்ளது என்று கூகுள் தெரிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X