பொது செய்தி

இந்தியா

பணியிடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்: தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : 'அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், பணியிடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்' என, தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்பட துவங்கியுள்ளன. அதேபோல், வணிக
No Spitting,  covid 19, coronavirus india,
பணியிடங்கள், எச்சில், அபராதம், துப்பினால், தொழிலாளர் நலத்துறை, எச்சரிக்கை

புதுடில்லி : 'அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர், பணியிடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்' என, தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் செயல்பட துவங்கியுள்ளன. அதேபோல், வணிக நிறுவனங்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில், பணியிடங்களில் எச்சில் துப்புவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என, பணியாளர் நல அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


முக கவசம் கட்டாயம்:


இதுகுறித்து, அமைச்சகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், 'பான் மசாலா' மற்றும் 'குட்கா' போன்றவற்றை பயன்படுத்தும் நிலையில், அலுவலக பகுதிகளில் எச்சில் துப்பக் கூடாது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, அபராதம் விதிக்க வேண்டும்.


latest tamil news


இதற்கான நடைமுறைகளை, சட்ட அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும். பொது இடங்கள் மற்றும் பணியிடங்களில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். முடிந்தவரை, வீட்டில் இருந்து பணியாற்றுவதை பின்பற்ற வேண்டும், அலுவலகங்கள், கடைகள், சந்தைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில், கை கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், உடல் வெப்ப பரிசோதனை ஆகியவற்றை, பணியாளர்கள் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சமூக இடைவெளி:


தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில், பணியிடம், மதிய உணவு அருந்துமிடம் உள்ளிட்டவற்றில், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
20-மே-202015:49:29 IST Report Abuse
kalyanasundaram GOVERNMENT WILL NOT BAN SUCH NARCOTIC, LIQUOR SINCE MOST OF THE MINISTERS WILL NOT BE ABLE TO AMASS WEALTH
Rate this:
Cancel
SELF -  ( Posted via: Dinamalar Android App )
20-மே-202011:53:46 IST Report Abuse
SELF அது என்ன பணி இடங்களில் மட்டும். அப்படியானால் பொது இடங்களில் துப்பலாமா... பான்பராக் ஐ ஒழித்துக் கட்டுவதற்கு எந்த அரசுக்கும் முதுகெலும்பு இல்லை.. பான்பராக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பூட்டு போட வேண்டும்.. மதுவை ஒழிப்போம் மது அருந்துதல் நாட்டுக்கும் உடலுக்கும் கேடு என எச்சரிக்கும் அரசு மதுக்கடைகளை மூடுவதற்கு என்ன தயக்கம்? எங்க இடங்களிலும் எச்சில் துப்பக் கூடாது புகை பிடிக்கக் கூடாது என்று கடுமையான சட்டம் அமல் படுத்த வேண்டும். மீறுவோர் மீது தாட்சண்யம் பார்க்காமல் 15 நாட்கள் சிறை தண்டனை கொடுக்க வேண்டும். கடுமையான சட்டங்களினால் மட்டுமே மக்களை திருத்த முடியும்... அவ்வப்போது பொது இடங்களில் எச்சில் துப்பினால் தண்டனை என்று அறிக்கை அளவில் மட்டும் நின்று விட கூடாது.
Rate this:
Cancel
20-மே-202011:40:36 IST Report Abuse
Prasanna Krishnan pls implement in all North side
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X