தவறான முடிவால் எல்லாம் முடிந்துவிடும்: கவுதம் காம்பீர்| Opening up Delhi may be 'death warrant': Gambhir | Dinamalar

தவறான முடிவால் எல்லாம் முடிந்துவிடும்: கவுதம் காம்பீர்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி: டில்லியில் பல தளர்வுகளை அறிவித்ததால், கொரோனா வைரஸ் பலருக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு, ஒரு தவறான முடிவால் எல்லாமே முடிந்துவிடும், என பாஜ., எம்பி கவுதம் காம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.இந்தியா முழுவதும் மே 18ம் தேதி முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலானது. இதில், மத்திய அரசு சார்பில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு
Gautham Gambhir, BJP, Arvind Kejiriwal, coronavirus, Delhi, கவுதம்காம்பீர், பாஜ, பாஜக, அரவிந்த்கெஜ்ரிவால், முடிவு, டில்லி, தளர்வு

புதுடில்லி: டில்லியில் பல தளர்வுகளை அறிவித்ததால், கொரோனா வைரஸ் பலருக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு, ஒரு தவறான முடிவால் எல்லாமே முடிந்துவிடும், என பாஜ., எம்பி கவுதம் காம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் மே 18ம் தேதி முதல் 4ம் கட்ட ஊரடங்கு அமலானது. இதில், மத்திய அரசு சார்பில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு மாநில அரசுகளும், தங்கள் மாநில கொரோனா பாதிப்புக்கு ஏற்ற வகையில் மேலும் சில தளர்வுகளை அமல்படுத்தின.

டில்லியில், இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 168 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், டில்லியில் ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷா, வாடகை கார்கள், பஸ்கள் இயங்கலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி, டில்லி முழுவதும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி, பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொரோனா பரவும் நிலையில் இவ்வாறான தளர்வுகளால் மக்கள் கூடுவதால், மேலும் பலருக்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


latest tamil news


இதனை பாஜ., எம்பி.,யான கவுதம் காம்பீர் விமர்சனம் செய்துள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: ஊரடங்கில் பெரும்பாலான செயல்பாடுகளுக்கு தளர்வு அளிப்பது டில்லிவாசிகளுக்கு மரண உத்தரவாதத்தை அளிப்பது போன்றது. இதுகுறித்து டில்லி அரசு மீண்டும் சிந்திக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன். ஒரு தவறான முடிவால் எல்லாமே முடிந்துவிடும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X