பொது செய்தி

தமிழ்நாடு

இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் வருவோம்: வெளிமாநில தொழிலாளர்கள் கண்ணீர் பேட்டி

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
migrants, migrant workers, tamil nadu migrants, tn news, tamil news, dinamalar news, coronavirus lockdown,
வெளமாநிலதொழிலாளர், புலம்பெயர்ந்ததொழிலாளர், ஜார்க்கண்ட், பீஹார், பீகார், உ.பி., உபி, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், சென்னை, எண்ணூர், ஊரடங்கு, நடைபயணம்,  மே.வங்கம், மேற்குவங்கம்,

சென்னை : ஊரடங்கால் பாதிக்கப் பட்ட வெளி மாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்வதற்காக, சாலையோரங்களில் காத்திருக்கின்றனர். ஆனாலும், இயல்பு நிலை திரும்பியதும், மீண்டும் தமிழகம் வரப்போவதாக, கண்ணீருடன் தெரிவித்தனர்.

பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, ஏராளமான தொழிலாளர்கள், தமிழகத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். கட்டுமான தொழில், ஓட்டல் தொழில், தொழிற்சாலைகள் என, அனைத்து துறைகளிலும் பணிபுரிந்தனர். கொரோனா நோய் பரவலை தடுக்க, மார்ச், 24 நள்ளிரவு முதல், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது; போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் வேலை செய்து வந்த, வெளி மாநில தொழிலாளர்கள், வேலை இல்லாமலும், சொந்த ஊர் செல்ல முடியாமலும் தவித்து வந்தனர். இவர்களில் பதிவு செய்த தொழிலாளர்கள், 1.70 லட்சம் பேர்; பதிவு செய்யாதவர்கள் ஏராளம். வேலையின்றி தவித்த, வெளி மாநில தொழிலாளர்கள், ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.


அவர்களுக்கு, அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டது. மேலும், தலா, 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கவும், அரசு உத்தரவிட்டது. வெளி மாநில தொழிலாளர்களில், சொந்த ஊர் செல்ல விரும்புவோரை, அவர்களின் மாநிலங்களுக்கு அனுப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. மே, 6 முதல், 16ம் தேதி வரை, 55 ஆயிரத்து, 473 பேர், 43 ரயில்களில், பீஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர். கடந்த, இரண்டு நாட்களில் மட்டும், 8,000 தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஏராளமான தொழிலாளர்கள், நடந்தே தங்கள் ஊருக்கு செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர், இயல்பு வாழ்க்கை திரும்பியதும், மீண்டும் தமிழகம் வருவோம் என, கண்ணீருடன் தெரிவித்தனர்.


அதன் விபரம்:
latest tamil newsநான், ஆறு மாதங்களாக, சென்னையில், கட்டுமான தொழிலில் ஈடுபட்டிருந்தேன். தற்போது இங்கு, கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. சாப்பாடு மற்றும் தண்ணீர் பிரச்னையும் உள்ளது. அதனால், சொந்த ஊர் செல்ல விரும்புகிறேன். கொரோனா தாக்கம் குறைந்து, இயல்பு நிலை திரும்பியதும், சென்னைக்கு வந்து விடுவேன்.
டி.பிரமோத், 21;
ஜார்க்கண்ட் மாநிலம்


நான், கம்பி கட்டும் வேலை செய்து வருகிறேன். தினமும், 800 ரூபாய் ஊதியம். கொரோனா காரணமாக, பணிக்கு செல்ல பயமாக உள்ளது.தங்கும் இடத்தில் வரும் தண்ணீரும் மோசமாக உள்ளது. இதனால், சமைக்கும் சாப்பாடு சிவப்பு நிறமாகிறது. போலீசார், சொந்த ஊர் செல்ல உதவுவதாக தெரிவித்தனர். கொரோனா தாக்கம் குறைந்ததும், சென்னை வந்து விடுவேன்.
ஏ.ரஷீத், 19;
பீஹார்


சென்னையில், கட்டட பணியில், கம்பி கட்டும் வேலை செய்து வருகிறேன். எங்கள் மாநிலம், பச்சை மண்டலமாக உள்ளது. இதனால், மனைவி, குழந்தைகள், சொந்த ஊர் வர அழைக்கின்றனர். கொரோனா முடிந்ததும், சென்னை வந்து விடுவேன்.
எஸ்.புபாய், 29;
மேற்கு வங்கம்


சென்னை, ராமாபுரத்தில், பூச்சு வேலை செய்து வருகிறேன்; தினமும், 850 ரூபாய் சம்பளம். எங்கள் ஊரில், 500 ரூபாய் தான் கிடைக்கும். கொரோனா காரணமாக வேலையில்லை; சாப்பாட்டிற்கு கஷ்டமாக உள்ளது. அதனால், சொந்த ஊர் செல்ல விரும்புகிறேன். கொரோனா முடிந்ததும், வேலை தேடி சென்னை வருவேன்.
எஸ்.கே.சாகப், 23;
மேற்கு வங்கம்


சென்னை, மணலி புதுநகரில் தங்கி, தனியார் நிறுவனங்களுக்கு, குட்டி யானை வாகனம் ஓட்டி வந்தேன். எங்கள் ஊரில் வேலை இல்லை. சம்பளம் குறைவு என்ற காரணத்திற்காக தான், தமிழகம் வந்தோம். ௧௦ ஆண்டுகள் வேலை பார்த்துள்ளேன். நிறுவனங்கள் கைவிரித்து விட்டன. உழைப்பிற்கு மதிப்பே இல்லை. ஊருக்கு செல்ல, போலீசாரிடம் தகவல் தெரிவித்து, வீதிகளில் காத்திருக்கிறோம்.அலைக்கழிக்கின்றனரே தவிர, ஊருக்கு செல்ல முடியவில்லை.
ஜி.கணேஷ், 40;
பீஹார்


நான், சென்னை வந்து, 25 ஆண்டுகளாகி விட்டது. காய்கறி கடை வைத்துள்ளேன். தற்போது, கொரோனா பீதியால், பிழைப்பு தேடி வந்த, எங்கள் மாநில ஆட்கள், செல்ல வழியின்றி, சாலையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். சில நிறுவனங்கள், கேவலப்படுத்தி வெளியேற்றி உள்ளன. ஒவ்வொருவர் கதையையும் கேட்கும் போதும், கண்ணீர் வருகிறது. தயவு செய்து, இவர்களுக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை. சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விடுங்கள்; புண்ணியமாக போகும்.
ஜெ.மங்குரு குப்தா, 37;
உத்தர பிரதேசம்

எங்கள் மாநிலத்தில், வேலை வாய்ப்பும், சம்பளமும் குறைவு.அதற்காகவே, சென்னை வந்து, குடிசை மாற்று வாரியத்தில், கட்டட வேலை பார்த்தேன். இரு மாதங்களாக சம்பளம் கிடையாது; ஊர் திரும்ப பணமில்லை. சரியான தகவலும் இல்லை. பஸ் நிலையத்தில் தான் காத்திருக்கிறேன். சொந்த ஊருக்கு சென்று, பெற்றோரை பார்த்தால் போதும். இனி, தமிழகம் வருவது கஷ்டம் தான்.

டி.தீப்சன், 20;
உ.பி.,
சென்னையில், 10 ஆண்டுகளாக, தனியார் கன்டெய்னர் நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்தேன். கொரோனா பீதியால், பத்தே நிமிடத்தில், இரக்கமின்றி வெளியேற்றி விட்டனர். இரண்டு மாதமாக, சாலையில் தான் வசிக்கிறேன். அம்மா உணவக சாப்பாடு தான். ஊருக்கு சென்றால் போதும் என்றுள்ளது. இதுபோன்ற ஒரு நிலைமையை, என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. ஊருக்கு செல்வதற்கான முறையான அறிவிப்பும், தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாடோடி போல் வாழ்கிறேன். இனி, தமிழகம் பக்கம் வரபோவதில்லை.

எஸ்.விஜேந்தர் பிரசாத், 45;
பாட்னா, பீஹார்


சென்னைக்கு பிழைப்புக்காக வரவில்லை. உறவினர்கள் உள்ளனர். 12ம் வகுப்பு முடித்த நிலையில், விடுமுறைக்கு வந்து, சுற்றிப் பார்த்து விட்டு திரும்ப முயற்சித்தேன். அதற்குள் ஊரடங்கு அமலாகி விட்டது. மே, 31, கல்லுாரிக்கான அட்மிஷன் கடைசி நாள். கையிருப்பான, 1,000 ரூபாயும் செலவாகி விட்டது. வேறு வழியின்றி, சாலையோரம் தங்கி உள்ளேன். என்னை ஊருக்கு அனுப்பினால் போதும்; வேறு ஏதும் வேண்டாம்.
கே. தனஞ்சர்குமார், 18;ஜகானா பாத், பீஹார்சென்னையில் உள்ள, தனியார் ரசாயன தொழிற்சாலையில், ஒப்பந்த தொழிலாளியாக, 25 ஆண்டுகளாக வேலை பார்த்தேன். ஊரடங்கால் போக சொல்லி விட்டனர். இரண்டு மாதமாக தவிக்கிறேன். கையிலிருந்த பணமும் காலியாகி விட்டது. தன்னார்வலர்கள் வினியோகிக்கும், பிஸ்கட், தண்ணீர் குடித்து உயிர் வாழ்கிறேன். உயிருடன் என் சொந்த ஊருக்கு திரும்பினால் போதும். பல ஆண்டுகளாக உழைத்தேன்; எனக்கு யாரும் உதவவில்லை.
எஸ்.பக்தீஸ், 32;
பாட்னா, பீஹார்


எட்டு மாதங்களாக, எர்ணாவூரில் தங்கி, தனியார் நிறுவனத்தில், ஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கிறேன். இரு மாதங்களாக சம்பளம் கிடையாது; வாடகை தர முடியவில்லை. எங்களுடன் தங்கியிருந்த பலர் கிளம்பி விட்டனர். மீதமுள்ள, ஆறு பேரும் கிளம்ப போகிறோம். குறிப்பிட்ட எந்த உதவியும், எங்களை வந்தடையவில்லை. இருப்பினும், எங்கள் நிறுவனம் சார்பில், இரு மாதத்திற்கு, நிவாரணமாக, 3,000 ரூபாய் வழங்கினர்; அது போதுமானதாக இல்லை. ஊருக்கு செல்லும் திட்டம் உள்ளது; திரும்பி வருவேன்.
எம்.டி.ராஜு, 29;
பீஹார்


ஸ்ரீபெரும்புதுார் மற்றும் கும்மிடிப்பூண்டியில், தனியார் வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தேன். என் வீட்டினர் கட்டாயப் படுத்தியதால், நான் செல்கிறேன். நிலைமை சரியானதும் திரும்ப வருவேன்.
கவுதன் குமார் பாஸ்வான், 22;
தன்பத், ஜார்க்கண்ட்


ஓராண்டு காலமாக, கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள இனிப்பகத்தில் வேலை பார்த்தேன். ஊரடங்கால் இனிப்பகத்தை மூடியிருப்பதால், எனக்கு வருவாய் இல்லை. அதனால், சொந்த ஊருக்கு செல்கிறேன். நிலைமை சரியானதும், அதே இடத்திற்கு வேலைக்கு வருவேன். பிரேம்சந்த் சவுஹான், 33;
அலிகார், உ.பி.,


பொன்னேரி அருகேயுள்ள தனியார் தொழிற்சாலையில், ஆறு மாதமாக வேலை பார்த்து வருகிறேன். வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், உடனடியாக வீடு திரும்பும்படி, என் வீட்டினர் அழைத்தனர். அதனால் செல்கிறேன்; மீண்டும் வருவேன்.
ஆதித்யா பிரியதர்ஷி, 21;
பாட்னா, பீஹார்விபரீத பயணத்தால் ஒருவர் மரணம்கும்மிடிப்பூண்டி அருகே, நடைபயணமாக சென்ற வட மாநில தொழிலாளி ஒருவர் இறந்தார்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், பொறுமை இழந்தவட மாநில தொழிலாளர்கள், நடைபயணமாக தங்கள் சொந்த மாநிலத்திற்கு செல்வது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி, நடைபயணமாக சென்று கொண்டிருந்த, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம் பிஸ்வாஸ்,42, என்பவர் நேற்று முன்தினம் இரவு, கவரைப்பேட்டை பகுதியில் சாலையோரம் மயங்கி விழுந்து இறந்தார். 'நிலைமையின் விபரீதம் தெரியாமல், நடை பயணமாக செல்லும் வட மாநில தொழிலாளர்களை கட்டுப்படுத்த வேண்டும். அவர்களின் தாய்மொழியில் பேசி, பயணத்தை போக்க வேண்டும். 'ரயில் றே்பாடு செய்ய விருப்பதை தெரிவித்து அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளிகளில் கல்லூரிகளில் தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தி, அவர்களை தங்க வைக்க வேண்டும். ரயில்கள் ஏற்பாடு செய்யப்படும் வரை உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
20-மே-202019:27:12 IST Report Abuse
Rajas ரயில் ஏறி சில தொழிலாளர்கள் மரணம் அடைந்த பின் தான் தொழிலாளர்கள் ரயில் ட்ராக்கில் தங்கள் மாநிலங்களுக்கு போகிறார்கள் என்று ஆட்சியாளர்களுக்கு தெரிந்தது.
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
20-மே-202019:25:48 IST Report Abuse
S. Narayanan Tamilnattil pala kattadanggal vada nattavar udaviyudan kattappattathu. atharkku nichayam nandri solliye aaga vendum.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
20-மே-202019:24:05 IST Report Abuse
Rajas சாலைகளில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ நினைப்பவர்கள், அவர்களின் சூட்கேஸ்களைத் தூக்கிச் செல்லலாமே என்று ஆணவத்துடன் பதில் சொன்னவர்கள் உள்ள தேசம் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X