பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாமல் வாகன ஓட்டிகள் 'உலா': ஆத்தூரில் கட்டுப்படுத்த ஆளில்லையா?

Added : மே 20, 2020
Share
Advertisement

ஆத்தூர்: இருசக்கர வாகனங்களில் செல்வோர், முகக்கவசம் அணியாமல் வலம் வருவதால், போலீசார், நகராட்சி அலுவலர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
'கொரோனா' பரவலை தடுக்க, முகக்கவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்ற, அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்போது, வெளி மாநிலங்களிலிருந்து, தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் மூலம், 'கொரோனா'பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஆத்தூரிலுள்ள சாலை, தெருக்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், முகக்கவசம் அணியாமல், 'உலா' வருகின்றனர். ஒரே பைக்கில், மூன்று பேர் வரை பயணிக்கின்றனர். பாதசாரிகள் கூட, முகக்கவசம் அணிந்து செல்வது குறைந்து விட்டது. இதனால், 'கொரோனா' பரவும் அபாயம் உள்ளதால், தேசிய, மாநில நெடுஞ்சாலை உள்பட அனைத்து இடங்களிலும், வாகன ஓட்டிகள், மக்கள் முகக்கவசம் அணிந்து வருவதை கட்டாயப்படுத்த வேண்டும். விதிமீறுவோர் மீது, உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நோய் பரவலை தவிர்க்க முடியும். அதனால், போலீசார், நகராட்சி அலுவலர்கள், விதிமீறலை தடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X