அமைப்புசாரா தொழிலாளருக்கு நிவாரண பொருள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைப்புசாரா தொழிலாளருக்கு நிவாரண பொருள் வழங்கல்

Added : மே 20, 2020
Share

வீரபாண்டி: அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினருக்கு, அரசின் நிவாரண பொருட்களை, எம்.எல்.ஏ., வழங்கினார். வீரபாண்டி ஒன்றியத்தில், கட்டுமானம், விவசாயம், தையல், மின்சாரம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில், பதிவு செய்யப்பட்ட, 207 உறுப்பினர் உள்ளனர். அதில் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளவருக்கு, தமிழக அரசு சார்பில், 'கொரோனா' நிவாரண தொகை, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில், எம்.எல்.ஏ., மனோன்மணி, நல வாரிய உறுப்பினருக்கு, நேற்று, 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.600 பேர்: நங்கவள்ளி, பி.என்.பட்டி., பேரூராட்சி, கோம்புரான்காடு மற்றும் கோனூர் ஊராட்சி, கூழையூர், சமத்துவபுரத்தில், தி.மு.க., சார்பில், 600 பேருக்கு தலா, 1,000 ரூபாய் மதிப்பில், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X