பொது செய்தி

தமிழ்நாடு

ரயிலில் 347 தொழிலாளர்கள் ராஜஸ்தான் அனுப்பிவைப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்திலிருந்து, 347 தொழிலாளர்கள், ரயில் மூலம் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், நேற்று நடந்தது. அதில், கலெக்டர் ராமன் பேசியதாவது: தமிழகத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை, அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில், அந்தந்த மாநிலத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நடைபயணமாக செல்வதை தடுக்க, இதற்கான ஏற்பாடு, பயணச்செலவை, தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. விருப்பம் தெரிவித்தவர்களுக்கு, உரிய பரிசோதனை நடத்தப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, சேலம் மாவட்டத்தில் மட்டும், புலம்பெயர்ந்த தொழிலாளர், 55 பேர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஈரோட்டில், 92, தர்மபுரியில், 4, திருவண்ணாமலையில், 9, திருப்பத்தூரில், 25, செங்கல்பட்டில், 47, சிவகங்கையில், ??, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 93 பேர் என, 347 தொழிலாளர், ராஜஸ்தான் அனுப்பிவைக்கப்படுகின்றனர். பஸ் வசதி, தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X