தலைவாசல்: காய்கறி நேரடி கொள்முதலால், தலைவாசல் தினசரி மார்க்கெட் களையிழந்து காணப்படுகிறது. தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டிலிருந்து, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு, காய்கறி ஏற்றுமதி செய்யப்படுவதால், கூட்டம் அதிகரித்து காணப்படும். ஆனால், சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் பரவிய, 'கொரோனா' தொற்றால், தலைவாசல் வரும் வியாபாரிகள் அச்சமடைந்தனர். இதனால், மொத்த கொள்முதல் வியாபாரிகள், மார்க்கெட் வருவதை தவிர்த்து, விவசாயிகளின் இடங்களுக்கே சென்று, நேரடி கொள்முதல் செய்தனர். வண்டி வாடகை செலவு, அலைச்சல், சுங்கம் உள்ளிட்ட செலவு இல்லாததால், விவசாயிகள் பலனடைந்தனர். மார்க்கெட் வரும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்து, களையிழந்த மார்க்கெட்டில், அனைத்து காய்கறி விலையும் சற்று சரிய தொடங்கியுள்ளது. வியாபாரிகள் கூறுகையில், 'நேரடி கொள்முதலால், விவசாயிகளுக்கு நேரம், பணம் சேமிக்கப்படுகிறது. காய்களுக்கு, அன்றைய மார்க்கெட் விலையே, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இருதரப்பினருக்கும் இது பயனாக அமைவதோடு, அதிகம் கூட்டம் சேரும் மார்க்கெட்டை தவிர்ப்பதால், தொற்று பரவும் அபாயம் குறைந்துள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE