பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவில் சிக்கிய 60 தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் 3 மாதமாக தவிப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

சேலம்: கர்நாடகாவில், மிளகு சாகுபடி தொழிலுக்கு சென்ற, சேலம் மாவட்ட தொழிலாளர், 60 பேர், மூன்று மாதமாக, சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், கருமந்துறை அடுத்த தாழ்வல்லத்தைச் சேர்ந்த, மலைவாழ் தொழிலாளர்கள், தங்கராஜ், 54, அவரது மகன் இளையராஜா, 24, பொன்னுசாமி, 30, ஆண்டி, 48, ராமன், 50, வெள்ளையன், 42, முருகேசன், 45, செல்வம், 36, திருப்பதி, 32, அழகேசன், 25, உள்பட, 60 பேர். இவர்கள், பொங்கல் பண்டிகை முடிந்து, கடந்த ஜன., 20ல், மிளகு பறிக்க, கர்நாடகா, சிட்மங்களா மாவட்டம், கடுப்புக்கரை, சிறுகுளா பகுதிக்கு சென்றனர். தாழ்வல்லத்தை சேர்ந்த ஏஜன்சி குப்புசாமி, 55, தோட்ட தொழிலாளர்களை, ஒட்டுமொத்தமாக, அழைத்துச்சென்றார். அங்கு, மூன்று மாதம் பணி முடித்த தொழிலாளர்கள், மார்ச் இறுதியில், ஊர் திரும்ப முடிவு செய்தனர். ஆனால், அந்த மாதம், 25 முதல், ஊரடங்கால், இதுவரை, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான இளையராஜா கூறியதாவது: ஊரடங்கிலிருந்து, இதுவரை வேலையும் கிடையாது. மூன்று மாத வருவாய், சாப்பாட்டுக்கே மொத்தமாக செலவாகிவிட்டது. தற்போது, வழிசெலவுக்கு பணமில்லாததோடு, உணவும் கிடைக்காமல் தவிக்கிறோம். ஒரு வழியாக மன்றாடி, சொந்த திரும்ப, அந்த மாநில அரசு அனுமதி அளித்துவிட்டது. எங்களை அழைத்து செல்ல, தமிழக அரசும், சேலம் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் வருவாய்த்துறை அதிகாரிகளை, மொபைலில் தொடர்பு கொண்டோம். உரிய பதில், நடவடிக்கை இல்லை. எங்களை அழைத்து செல்ல, மாவட்ட நிர்வாகம், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவ விரும்புவோர், 89035 - 78542 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X