பொது செய்தி

தமிழ்நாடு

இயல்பு நிலைக்கு திரும்பிய நாவக்குறிச்சியால் மகிழ்ச்சி

Added : மே 20, 2020
Share
Advertisement

தலைவாசல்: தலைவாசல், நாவக்குறிச்சி, ஆதிதிராவிடர் காலனியில் வசித்த, 44 வயதுடையவருக்கு, 'கொரோனா' தொற்று பாதிப்பு இருந்ததால், அவர், அவரது குடும்பத்தினரை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தினர். நாவக்குறிச்சி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மக்கள், வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு மாதமாக, போலீஸ், சுகாதாரம், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. குறிப்பாக, விவசாயிகள், விளைபொருட்களை, தலைவாசல் மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இந்நிலையில், அப்பகுதியில், புது தொற்று எதுவும் இல்லாததால், இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. விவசாயிகள், விளைபொருட்களை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல தொடங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X