பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக்கு ஆசிரியர் செல்ல வேண்டுமா? வழிகாட்டுதல் இல்லாததால் குழப்பம்

Added : மே 20, 2020
Share
Advertisement

சேலம்: ஆசிரியர்கள், பள்ளிக்கு செல்வது குறித்து, உரிய வழிகாட்டுதல் வெளியிடாததால், குழப்பம் நிலவுகிறது.
தமிழகத்தில், 'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச், 25 முதல் ஊரடங்கால், ஒத்திவைக்கப்பட்ட, 10ம் வகுப்பு தேர்வை, ஜூனில் நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, வெளிமாவட்டங்கள் சென்ற ஆசிரியர்கள், மே, 20க்குள்(இன்று) பணிபுரியும் மாவட்டங்களுக்கு வந்து சேர்ந்து விட, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மே மாதம், கோடை விடுமுறை என்பதால், இன்று பள்ளிக்கு செல்ல வேண்டுமா, பணிகள் என்ன என்பது குறித்து, எந்த வழிகாட்டுதல் இல்லாததால், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தலைமையாசிரியர்களும், சுற்றறிக்கை ஏதும் வராததால், பதில் கூற முடியாமல் திணறி வருகின்றனர். இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறுகையில், ''பணிபுரியும் ஊர்களுக்கு வந்து சேர வேண்டும் என்றே, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பணியில் இணைவது குறித்து விரைவில் வழிகாட்டுதல் அனுப்பப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X