சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தனமரம் பதுக்கிய முதியவருக்கு அபராதம்

Added : மே 20, 2020
Share
Advertisement

வாழப்பாடி: வாழப்பாடி வனச்சரகம், குறிச்சி பிரிவு, குப்பனூர், சீறிக்காட்டில் வசிப்பவர் மாரிமுத்து, 59. இவர், தன் தோட்டத்தில் வளர்ந்த சந்தன மரத்திலிருந்து, 7 கிலோ அளவுக்கு வெட்டி வைத்துள்ளார். இதை கண்டுபிடித்த வனத்துறையினர், நேற்று, அவருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
வேட்டைக்கு முயற்சி: அதேபோல், நெய்யமலை பிரிவு, இடையப்பட்டி வனச்சோதனை சாவடியில், இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அத்தனூர்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரன், சேகர் ஆகியோர், காட்டு முயலை வேட்டையாட கம்பி வலை எடுத்து வந்தது தெரிந்தது. இதனால், அவர்கள் மீது, வழக்குப்பதிந்த வனத்துறையினர், தலா, 7,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X