சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் பிடிப்பதில் கோஷ்டி மோதல்: 6 பேர் கைது; 3 பெண்களுக்கு வலை

Added : மே 20, 2020
Share
Advertisement

சேலம்: தண்ணீர் பிடிப்பதில், இரு கோஷ்டிகள் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் உள்பட ஆறு பேரை, போலீசார் கைது செய்தனர். அத்துடன், மூன்று பெண்களை தேடுகின்றனர்.
சேலம், சன்னியாசிகுண்டு, கிருஷ்ணன் நகரை சேர்ந்த, சேட்டு மனைவி கந்தாயி, 60. அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் மனைவி செல்வி, 55. இவர்கள், நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, அங்குள்ள தெரு குழாயில், தண்ணீர் பிடித்தபோது, தகராறு ஏற்பட்டது. அதில், அவர்களின் குடும்பத்தினரும் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். கிச்சிப்பாளையம் போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பார்த்திபன் மகன் அசோக்குமார் புகார்படி, வினோத், 28, விக்னேஷ், 25, விஜய், 25, ஆகியோரை, நேற்று, போலீசார் கைது செய்தனர். அத்துடன், கலைவாணி, 20, என்பவரை தேடி வருகின்றனர். அதேபோல், விக்னேஷ் புகார்படி, அசோக்குமார், 32, ஆனந்த், 30, கோகிலா, 20, ஆகியோரை கைது செய்தனர். செல்வி, கந்தாயி தலைமறைவானதால், போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X