சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிவி' எடிட்டர் எனக்கூறி டி.எஸ்.பி.,க்கு மிரட்டல்: போதை மேலாளர் 'கொரோனா' முகாமில் தனிமை

Added : மே 20, 2020
Share
Advertisement

சங்ககிரி: தனியார், 'டிவி' எடிட்டர் எனக்கூறி, போதையில், டி.எஸ்.பி.,யை மிரட்டிய, குடிநீர் நிறுவன மேலாளர், 'கொரோனா' முகாமில் அடைக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், முருங்கபாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 28. இவர், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், முத்துசாமி ஆகியோரை அழைத்துக்கொண்டு, 'இண்டிகா' காரில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை, சின்னாக்கவுண்டனூர் பைபாஸ் சோதனைச் சாவடியில், காரை நிறுத்தி, இ - பாஸ் உள்ளதா என கேட்டனர். இல்லை என தெரிவித்ததால், திரும்பிச் செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து, 'குடி' போதையிலிருந்த சீனிவாசன், காரிலிருந்து இறங்கி, சங்ககிரி டி.எஸ்.பி., தங்கவேலிடம், 'தனியார் 'டிவி' எடிட்டரான நான், கோடம்பாக்கத்தில் பணிபுரிகிறேன்' எனக்கூறி, வாக்குவாதம் செய்தார். பின், போலீசார் விசாரித்ததில், திருப்பூரிலுள்ள மினரல் வாட்டர் நிறுவனத்தில், அவர் மேலாளராக பணிபுரிவதும், திருப்பூர், கிருஷ்ணகிரி போலீஸ் ஸ்டேஷன்களில், குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதும் தெரியவந்தது. பின், மது அருந்தி வாகனம் ஓட்டி வந்த குற்றத்துக்காக, சீனிவாசனை கைது செய்த போலீசார், அவர் உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால், சுகாதாரத்துறை மூலம், 'கொரோனா' பரிசோதனைக்கு, சங்ககிரி அரசு ஆண்கள் விடுதியிலுள்ள முகாமில் தனிமைப்படுத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X