சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்தத்தில் தேன் எடுக்க முயன்றவர் மரத்திலிருந்து தவறி விழுந்து பலி

Added : மே 20, 2020
Share
Advertisement

ஏற்காடு: ஒப்பந்தம் போட்டு, தேன் எடுக்க மரத்தில் ஏறியவர், தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
ஏற்காடு, பட்டிப்பாடியைச் சேர்ந்தவர் ஜெயராமன், 41. கூலித்தொழிலாளியான இவருக்கு, மனைவி உமா, இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, காக்கம்பாடியில், காமராஜ் என்பருக்கு சொந்தமான தோட்டத்தில் தேன் எடுக்க சென்றார். அத்துடன், எடுக்கும் தேனில் பாதி ஜெயராமனுக்கும், மீதி, காமராஜூக்கும் என, இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். தொடர்ந்து, மரத்தில் ஏறிய ஜெயராமன், தவறி விழுந்தார். காமராஜ் உள்ளிட்டோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முயன்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டார். நேற்று காலை ஜெயராமனின் உறவினர்கள், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் குவிந்தனர். அப்போது, ஜெயராமனின் இறப்பு குறித்து, உரிய விசாரணை மேற்கொண்டு, இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர். அவர்களை, போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X