பொது செய்தி

தமிழ்நாடு

5 அடி நீளத்தில் மரவள்ளி கிழங்கு மண்ணில் விளைந்த ஆச்சர்யம்!

Added : மே 20, 2020
Share
Advertisement

பு.புளியம்பட்டி: சத்தியமங்கலத்தில் அறுவடையின் போது, 5 அடி நீளத்தில் மரவள்ளிக்கிழங்கு கிடைத்தது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சத்தியமங்கலம் அருகேயுள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன். தனது தோட்டத்தில், மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடவு செய்த பயிருக்கு, சொட்டுநீர் பாசனத்தில் தண்ணீர் பாய்ச்சி பராமரித்தார். தற்போது அறுவடை நடந்து வருகிறது. ஒரு செடியில் இருந்த, 10 கிழங்குகளும், 5 அடி உயரத்தில் இருந்ததால், பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். தகவலறிந்த அக்கம்பக்கத்தை சேர்ந்த மக்களும், 5 அடி நீள மரவள்ளி கிழங்கை அதிசயமாக பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறியதாவது: மானாவாரி சாகுபடியில் மரவள்ளிக்கிழங்கு, ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம், 7 டன்னில் இருந்து, 10 டன் வரை கிடைக்கும். சொட்டுநீர் பாசனத்தில் சாகுபடி செய்ததால், 13 டன் வரை கிடைத்துள்ளது. கிழங்குகள் நன்கு வளர்ந்ததால், டன், 7,000 ரூபாய்க்கு விற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X