ரூ.51.55 லட்சத்துக்கு எள் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.51.55 லட்சத்துக்கு எள் விற்பனை

Added : மே 20, 2020
Share

மொடக்குறிச்சி: கொடுமுடியில், 51.55 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், எள் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 48 ஆயிரத்து, 548 கிலோ எள் வரத்தானது. கறுப்பு எள் கிலோ, 98.50 ரூபாய் முதல், 113.50 ரூபாய் வரை விலை போனது. இதேபோல் சிவப்பு எள், 97.59 ரூபாய் முதல், 113.50 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 51 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், கறுப்பு எள் கிலோவுக்கு, 2.91 ரூபாயும், சிவப்பு எள், 2.91 ரூபாயும் விலை உயர்ந்தது. இதேபோல் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று எள் ஏலம் நடந்தது. கறுப்பு ரக எள் கிலோ, 97.89 ரூபாய் முதல், 115.99 ரூபாய் வரை, சிவப்பு எள் கிலோ, 96.39 ரூபாய் முதல், 114.09 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 57 டன் எள், 60.81 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X