பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய மின்சாரம் பறிப்பு: கொ.ம.தே.க., கண்டனம்

Added : மே 20, 2020
Share
Advertisement

ஈரோடு: 'விவசாய மின்சாரம் பறிப்பு, மாநில அரசின் உரிமையை பறிப்பது போன்ற நடவடிக்கையில், மத்திய அரசை எதிர்க்க, முதல்வர் தயாராக வேண்டும்' என, கொ.ம.தே.க., வேண்டு கோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து கொ.ம.தே.க., பொது செயலாளர் ஈஸ்வரன், வெளியிட்டுள்ள அறிக்கை: உலகமே கொரோனாவில் இருந்து விடுபட, பாதுகாத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்கிறது. ஆனால், இந்திய அரசு இலவச மின்சாரத்தை பறிப்பது, மாநில அரசின் உரிமையை பறித்தல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்குதல், அன்னிய முதலீடுகளை அனுமதித்தல் என கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. மாநில அரசு கடன் வாங்கும் அனுமதியை உயர்த்தி அறிவித்துவிட்டு, அதைப்பெற பல நிபந்தனை விதித்திருப்பது, மாநில உரிமையை மதிக்காத செயலாகும். ஒரே தேசம்; ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம், அனைத்து மாநில அரசுகளால் ஏற்கப்படாதது. மின்சார பகிர்மானத்தை மத்திய அரசு கையில் எடுத்து கொள்வதையும் மாநில அரசுகள் விரும்பவில்லை. விவசாயத்துக்கான இலவச மின்சாரத்தை பாதுகாக்கவும், மாநில தனித்தன்மையில் சமரசம் செய்யாமல் இருக்க, தமிழக அரசின் எதிர்ப்பு மட்டும் போதாது. கடும் நடவடிக்கையை மேற்கொள்ள, முதல்வர் தயாராக இருக்க வேண்டும். மாநிலத்துக்கு எதிரான நடவடிக்கைகளை, பெயரளவுக்கு எதிர்த்துவிட்டு, மத்திய அரசுடன் ஒத்துப்போனால், தமிழக மக்களின் எதிர்ப்பை, அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X