பொது செய்தி

தமிழ்நாடு

1,600 குடும்பங்களுக்கு தி.மு.க., நிவாரணம்

Added : மே 20, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி யூனியனில், 15 ஆயிரம் நலிவடைந்த குடும்பங்களுக்கு, தி.மு.க., சார்பில் கொரோனா நிவாரண உணவு பொருட்களை, ஈரோடு மாவட்ட செயலாளர் முத்துசாமி, வழங்கி வருகிறார். சில்வர் தட்டு, கோதுமை, ரவை, சமையல் எண்ணெய், பிஸ்கட், முட்டை, முகக்கவசம் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மொடக்குறிச்சியில், 100 மாற்றுத்திறனாளிகள் உள்பட, 1,486 பேருக்கு கொரோனா நிவாரண உணவு பொருட்களை, முத்துசாமி வழங்கினார். அவல்பூந்துறையில், 136 மாற்றுத்திறனாளிகள் உள்பட, 1,600 பேருக்கு நிவாரண பொருட்களை நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாநில நெசவாளரணி செயலாளர் சச்சிதானந்தம், அவல்பூந்துறை செயலாளர் சண்முக சுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனசேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X