பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திரா புழுங்கல் அரிசி 2,600 டன் வருகை

Added : மே 20, 2020
Share
Advertisement

ஈரோடு: ஆந்திராவில் இருந்து, 2,600 டன் புழுங்கல் அரிசி ஈரோடு வந்தது. ஆந்திர மாநிலம் நிசாமாபாத்தில் இருந்து ஈரோட்டுக்கு, 2,600 டன் புழுங்கல் அரிசி, சரக்கு ரயிலில் ஈரோடு கூட்ஸ்ஷெட்டுக்கு நேற்று வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி, பொது வினியோக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா நிவாரண அரிசி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் குடோன்களில் இருப்பு குறைந்தது. இதையடுத்து பொது வினியோக திட்டத்தில் வழங்க, அரசு சார்பில் ஆந்திரா மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 2,600 டன் புழுங்கல் அரிசி வந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X