பொது செய்தி

தமிழ்நாடு

751 மகளிருக்கு கடனுதவி

Added : மே 20, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மகளிர் குழுவினருக்கு, கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 56 மகளிர் குழுக்களை சேர்ந்த, 751 பேருக்கு, 46.55 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறப்பு கடனுதவி வழங்கி, கலெக்டர் கதிரவன் வழங்கி கூறியதாவது: ஈரோடு, திண்டல், அக்ரஹாரம், நசியனூர் உட்பட பல்வேறு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், இத்தொகை வழங்கப்படுகிறது. முதல் ஆறு மாதம் தொகையை செலுத்த தேவையில்லை. அதன்பின், முறையான வட்டியுடன், 34 மாத தவணையில் செலுத்த வேண்டும். இதன் மூலம், மகளிர் குழு செயல்பாடுகள் ஊக்கப்படுத்தப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், தென்னரசு, எஸ்.பி., சக்தி கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X