பொது செய்தி

தமிழ்நாடு

அனைவருக்கும் 100 நாள் வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்

Added : மே 20, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில், இந்திய கம்யூ., கட்சி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல கூடுதல் ரயில், பஸ்களை இயக்க வேண்டும். கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க, தொழிலாளர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் சட்டப்படி, 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில், இந்திய கம்யூ., கட்சி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல கூடுதல் ரயில், பஸ்களை இயக்க வேண்டும். கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க, தொழிலாளர்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் சட்டப்படி, 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும். குடும்பத்தில் அனைவருக்கும், 100 நாள் திட்டப்பணியில் வேலை வழங்க வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு புத்துயிர் வழங்கும் வகையில், கடனில் மூன்று மாத தவணை தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய கடன்கள் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும், என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். ஈரோடு மாவட்ட இந்திய கம்யூ., சார்பில், கட்சி அலுவலகம் முன், மாவட்ட பொருளாளர் ரமணிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் சென்னிமலை, மொடக்குறிச்சி, கோபி, பவானி, பெருந்துறை உட்பட பல்வேறு இடங்களில், இ.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X