பொது செய்தி

தமிழ்நாடு

கோபியில் இன்று முதல் மீண்டும் வாழைத்தார் ஏலம்

Added : மே 20, 2020
Share
Advertisement

கோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை வாழைத்தார் ஏலம் நடந்தது. கொரோனா ஊரடங்கால் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மரத்திலேயே வாழைத்தார் பழுத்து வீணாவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனால் கடந்த ஏப்.,15 முதல் அளிக்குளி குளிர்பதன கிடங்கு, ஏப்.,17 முதல் கூகலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடந்தது. குறைந்த வியாபாரிகளே பங்கேற்றதால், விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விலை, சங்கத்துக்கும் போதிய லாபம் கிடைக்கவில்லை. இதனால் பழையபடி, கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திலேயே, மே, 20 (இன்று) முதல் ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இனி புதன், சனிக்கிழமை வழக்கம்போல் சங்கத்தில் ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த விவசாயிகள், நேற்றே வாழைத்தாரை கொண்டு வந்து, வரிசையில் இடம் பிடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X