ஆற்றில் நண்பர்களுடன் குளித்த கொத்தனார் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் நண்பர்களுடன் குளித்த கொத்தனார் பலி

Added : மே 20, 2020
Share

அந்தியூர்: அந்தியூர் அருகே, நண்பர்களுடன் ஆற்றில் குளித்த கொத்தனார், தண்ணீரில் மூழ்கி பலியானார். அந்தியூர் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சென்ட்ராயன், 21; கொத்தானாரான இவர், நண்பர்கள் ஐந்து பேருடன், கீழ்வாணி பகுதியில் பவானி ஆற்றில் குளிக்க, நேற்று மாலை சென்றார். நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கினார். இதைப்பார்த்து நண்பர்கள் சத்தமிடவே, அருகில் குளித்தவர்கள் வந்தனர். அவர்களால் சென்ட்ராயனை சடலமாகவே மீட்க முடிந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X