மணமான 4 ஆண்டில் பெண் விபரீத முடிவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணமான 4 ஆண்டில் பெண் விபரீத முடிவு

Added : மே 20, 2020
Share

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், பச்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த, சுமை தொழிலாளி கேசவன். இவர் மனைவி சித்ரா, 21; காதல் திருமணம் செய்து நான்காண்டுகள் ஆகிறது. இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. சித்ரா சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அடிக்கடி தன் தாய் வீட்டுக்கு சித்ரா சென்றதால், கணவனுடன் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இரு நாட்களுக்கு முன் சித்ரா, தாய் வீட்டில் இருந்து கணவன் வீட்டுக்கு வந்தார். ஆனாலும், தம்பதியர் பேசி கொள்ளவில்லை. நேற்று காலை வீட்டில் சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X